/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
சர்வதேச கிளவுன் திருவிழா
கோவையில் முதல் முறையாக, புரோஜோன் மாலில், உலக புகழ்பெற்ற கலைஞர்களின் சர்வதேச கிளவுன் கலை விழா இன்று நடக்கிறது. மதியம் 3:00 மணி, மாலை 5:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி என மூன்று நிகழ்வுகளாக, நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேஜிக் ஷோ, மைம், மியூசிக், அக்ரோபெட் மற்றும் யூனி சைக்கிளிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
பொங்கல் விழா
கோவை தலைமை தபால்நிலையத்தில், பொங்கல் விழா நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு பொங்கல் சமைக்கும் போட்டி நடக்கிறது. காலை, 10:00 முதல் 11:00 மணி வரை, பழனி பாதயாத்திரை குழுவினரின் ஜமாப் இசை, உறியடி மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு நடக்கிறது. மதியம், 12:15 மணி முதல் டேபிள் டென்னிஸ் அரங்கில் திறப்பு விழா, பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள், பொங்கல் விருந்து நடக்கிறது.
இன்னிசை
பாரதீய வித்யா பவனின் கோவை மையம் சார்பில், 27வது பொங்கல் இசை விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவன் வளாகத்தில் மாலை, 6:00 மணிக்கு இசைநிகழ்ச்சி நடக்கிறது. இன்று, ஸ்பூர்த்தி ராவ் குழுவினர் இசைக் கச்சேரி நடத்துகின்றனர்.
கல்லுாரி பொங்கல்
கே.ஜி.கலை அறிவியல் கல்லுாரியில், பொங்கல் விழா, கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. கே.ஜி.கல்விக்குழும, நிர்வாக அறங்காவலர், அசோக் பக்தவத்சலம் தலைமை வகிக்கிறார். பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பொங்கல் வைப்பதுடன், மாணவர்களுக்கு பல்வேறு பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
பகவத்கீதை சொற்பொழிவு
'நான்' என்ற அகந்தையை கைவிட்டு, எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாலை 6:00 முதல், 7:00 மணி வரை, 'பகவத்கீதை' சொற்பொழிவு நடக்கிறது.
'குடி' நோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, இம்முகாம் நடக்கிறது.