/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
'கண்ணதாசன்' சொற்பொழிவு
கோவை வசந்தவாசல் கவி மன்றம் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு, ரேஸ்கோர்ஸ், கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், கவிஞர் மருதுார் கோட்டீஸ்வரன், 'கவியரசர் கண்ணதாசன்' எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
ரத்ததான முகாம்
தமிழக வெற்றிக் கழகம் அன்னுார் தெற்கு ஒன்றியம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து, ரத்ததான முகாமை நடத்துகின்றன. அன்னுார், அரசு மருத்துவமனையில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
பூச்சாட்டு திருவிழா
வெள்ளிமலைப்பட்டிணம், மாகாளியம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, லீலா கிருஷ்ணா பிருந்தாவனம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு பூவோடு கோவில் வலம் வருதல், முனியப்பன் சாந்தி வாங்குதல், இரவு, 10:00 மணிக்கு நடக்கிறது.
மகா கும்பாபிஷேக விழா
* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைபுதுார். திருப்பள்ளி எழுச்சி, ஹோமம், வேதபாராயணம், பிராண பிரதிஷ்டை n காலை, 6:00 மணி. மகா கும்பாபிஷேக விழா n காலை, 10:00 மணி முதல். மகா அன்னதானம் n மதியம், 12:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.