Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சொத்து கொடுத்தும் கண்டுக்கலையா திரும்ப வாங்க கலெக்டர் உதவுவார்

சொத்து கொடுத்தும் கண்டுக்கலையா திரும்ப வாங்க கலெக்டர் உதவுவார்

சொத்து கொடுத்தும் கண்டுக்கலையா திரும்ப வாங்க கலெக்டர் உதவுவார்

சொத்து கொடுத்தும் கண்டுக்கலையா திரும்ப வாங்க கலெக்டர் உதவுவார்

ADDED : ஜூன் 07, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
வயதான பெற்றோரை பராமரிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு, எழுதிக்கொடுத்த சொத்தின் உரிமையை ரத்து செய்ய முடியும். சொத்தை எழுதிக்கொடுத்துவிட்டு சிரமப்படும் பெற்றோர், எவ்வித தயக்கமும் இன்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அணுகலாம்.

இன்று பல பெற்றோர், தங்கள் சொத்தின் கடைசி காசு வரை, பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்து விடுகின்றனர். ஆனால் வருமானம் இல்லாத வயதான காலத்தில், இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு பெற்றோரை கவனித்துக்கொள்வது கசக்கிறது. இதனால் மருந்துக்குக்கூட, அவர்களை சார்ந்திருக்கும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்பேர்ப்பட்ட பெற்றோர், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தயங்காமல் புகார் அளித்தால் தீர்வு கிடைக்கும் என்கிறார், கோவை வழக்கறிஞர் பிரீத்தி.

வழக்கறிஞர் பிரீத்தி கூறியதாவது:

வயது முதிர்ந்த பெற்றோரை, பராமரிக்க வேண்டியது சட்டப்படி பிள்ளைகளின் கடமை. பெற்றோருக்கு சொத்து இருந்தாலோ அல்லது இல்லை என்றாலோ, பிள்ளைகளிடம் மாத பராமரிப்பு தொகை பெற, சட்டத்தில் வழிவகை உள்ளது. நேரடியாக நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்றம் வாயிலாகவே பராமரிப்புத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

முதுமை காலத்தில் பிள்ளைகள் இருந்தும், தனித்து விடப்படும் முதியோர் நிலமை, மிகவும் கொடுமையானது. பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோரை, பராமரிக்க தவறும் பிள்ளைகளின் எதிர்காலமும் அப்படித்தான் இருக்கும் என்ற உதாரணங்களை, நாங்கள் தினந்தோறும் பார்க்கின்றோம். தவிர, பலர் சொத்து முழுவதும் எழுதிவைத்து, மருத்துவ செலவுக்கு கூட தவிப்பதை காண்கிறோம். இதுபோன்ற பெற்றோர், சட்ட ரீதியாக அணுகினால் எளிதாக சொத்துக்களை திரும்ப பெறலாம். பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007 பிரிவு 23ன் கீழ், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தால் போதுமானது. உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடியாக சொத்து உரிமையை ரத்து செய்து பெற்றோரிடம் வழங்கப்படும்.

ஆகவே, பிள்ளைகள் கொடுமை செய்தாலும், சகித்துக்கொண்டு வாழவேண்டிய அவசியம் பெற்றோருக்கு இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us