/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கும்பாபிஷேக விழா
காட்டூர், காளப்ப லேஅவுட், பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 4:30 மணி முதல், ஹோமங்கள், அபிஷேகம், முளைப்பாரி எடுத்து வருதல் நடைபெறும். மாலை, 5:00 மணி முதல், கும்ப அலங்காரம், கடம் புறப்பாடு, முதற்கால ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
ராதா கல்யாண மகோற்சவம்
ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது. துடியலுார், மேட்டுப்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில், காலை, 6:00 மணி முதல், பூஜைகள், ஹோமங்கள், பஜன், ஹரிகதை, ராமசங்கீர்த்தனம் ஆகியவை நடக்கிறது.
ஆன்மிக சொற்பொழிவு
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், வாக்கிய விருத்தி வகுப்பு காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 5:30 மணிக்கு, சுவாமி சங்கரானந்தா வழங்கும், அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல் நடக்கிறது.
பண்பாட்டை மீட்போம்
ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவனில், 183வது சிந்தனை அரங்கத்தின் சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. பவன் வளாகத்தில், மாலை, 5:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், 'பண்பாட்டை மீட்டெடுப்போம்' என்ற தலைப்பில், விருந்தினர் சிறப்புரையாற்றுகிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
நற்பெரும் விழா
அன்னுார், இரும்பறை, ஓதிமலை அடிவாரத்தில் நற்பெரும் விழா காலை, 8:00 மணி முதல் நடக்கிறது. சுந்தர சிவநேச அடிகளார் திருமடம் திறப்பு விழா, சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா, தெய்வச் சேக்கிழார் குருபூஜை மலர் வழிபாடு மற்றும் சிவநேச அடிகள் குரு மகா சந்நிதானம் பட்டமேற்பு விழா ஆகியவை நடக்கிறது.
ஓவியக்கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் 2025ம் ஆண்டு ஓவியக் கண்காட்சிகளை, 'ரிதமிக் பேலட்' தொடர் என்ற தலைப்பில் நடத்தி வருகிறது. இததொடரின், 15வது ஓவியக்கண்காட்சி அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் நடந்து வருகிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை பார்வையிடலாம்.