Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ADDED : மார் 22, 2025 11:19 PM


Google News

வேதாந்த அறிமுக வகுப்பு


மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், வேதாந்த அறிமுக வகுப்பு காலை, 9:30 மணி முதல் நடக்கிறது.மாலை, 5:30 மணிக்கு, 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில், சிறப்புரை நடக்கிறது.

பகவத்கீதை சொற்பொழிவு


உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை, மனமே வலிமையானது என்கிறது. டாடாபத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

பூசாரிகள் பேரவை கூட்டம்


விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், மாநகர மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் காலை, 10:00 மணிக்கு கூட்டம் துவங்குகிறது.

களப்பணி


பேரூர், பெரிய குளம், 'வாட்டர் வாரியர்' அடர்வனம் மற்றும் பல்லுயிர் பூங்கா பகுதிகளில், 383வது வார தொடர் களப்பணி நடக்கிறது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், காலை, 7:00 முதல் 9:00 மணி வரை, களப்பணி நடக்கிறது ஆர்வமுள்ளவர்கள் களப்பணியில் ஈடுபடலாம்.

மெகா பட்டிமன்றம்


கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'மன அழுத்தம் வருதவதற்குப் பெரிதும் காரணம் வெளிச்சூழல், வீட்டுச்சூழல்' என்ற தலைப்பில், மெகா பட்டிமன்றம் நடக்கிறது. சத்தி மெயின் ரோடு, சிவானந்தபுரம், குளோபஸ் சென்டர் ஹால் 'ஏ'வில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சமஸ்கிருத வகுப்புகள்


ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.

அமைதியின் அனுபவம்


தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம், மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us