/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைகளை தாக்கும் சர்க்கரை அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம் குழந்தைகளை தாக்கும் சர்க்கரை அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம்
குழந்தைகளை தாக்கும் சர்க்கரை அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம்
குழந்தைகளை தாக்கும் சர்க்கரை அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம்
குழந்தைகளை தாக்கும் சர்க்கரை அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம்
ADDED : மார் 22, 2025 11:19 PM

சர்க்கரை நோய், குழந்தைகளிடமும் கருணை காட்டுவதில்லை என்கிறார், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
அவர் கூறியதாவது:
சர்க்கரை நோய், பிறந்த குழந்தையிலிருந்து, 100 வயது மூதாட்டி வரை யாருக்கும் வரலாம். இதயங்கள் அறக்கட்டளையின் வாயிலாக, ஒரு வயதிலிருந்து, 20 வயது வயதுவரை, 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களைத் தாக்கும் சர்க்கரை குறைபாட்டிற்கு முதல் வகை (டைப் 1) சர்க்கரை நோய் என்று கூறுவோம்.
எடை குறைதல், சிறுநீர் அடிக்கடி கழித்தல், பசி, தாங்க முடியாத அளவுக்கு இருத்தல், தாகம், வாய் அடிக்கடி உலர்ந்துவிடும் அளவுக்கு அதிகமாக இருத்தல் ஆகியவை அறிகுறிகள்.
இந்த அறிகுறிகளில் எது இருந்தாலும் , உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தையின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில், அடிக்கடி அறியாமல் சிறுநீர் கழித்து துணி மாற்ற வேண்டியிருந்தால், சர்க்கரை அளவை பார்ப்பது நல்லது. இது நோயின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி தேவைப்படும். பேக்கரி உணவு, நொறுக்குத் தீனிகள், பிஸ்கட், பன், சிப்ஸ் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்கலாம். காய்கறி, சிறுதானிய உணவு ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் உட்கொள்ளலாம். பிற குழந்தைகளை விட, இப்பாதிப்புள்ள குழந்தைகள் பெரியளவில் சாதித்துள்ளனர். அதனால், கவலை தேவையில்லை.
இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் பெற்றோர் தயங்காமல், இதயங்கள் அறக்கட்டளையை, 76393 44466 என்ற எண்ணில் அழைக்கலாம். தமிழகத்தில் எங்கு இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம். அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.