/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
கனிமவளம் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : மார் 25, 2025 10:11 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் உரிய அனுமதி சீட்டு இன்றி, கனிமவள கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு --- சொக்கனூர் ரோடு வழியாக, நாள்தோறும் ஏராளமான டிப்பர் லாரிகளில், கனிமவள கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதில், சொக்கனூர் ரோடு மூலக்கடை அருகே கனிமவள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியே, கேரள மாநில பதிவு எண் கொண்ட (கேஎல் 09 ஏக்யூ 2012) டிப்பர் லாரியை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி கனிமவள கற்கள் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, டிப்பர் லாரி டிரைவர் பாலக்காட்டை சேர்ந்த ஜேம்ஸ் மார்ட்டின், 45, மற்றும் டிப்பர் லாரியை கிணத்துக்கடவு போலீஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வாகன உரிமையாளர் மீதும் புகார் அளித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.