/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க., பிரமுகர் அத்துமீறல் ; மிரட்டல் விடுத்ததாக புகார் தி.மு.க., பிரமுகர் அத்துமீறல் ; மிரட்டல் விடுத்ததாக புகார்
தி.மு.க., பிரமுகர் அத்துமீறல் ; மிரட்டல் விடுத்ததாக புகார்
தி.மு.க., பிரமுகர் அத்துமீறல் ; மிரட்டல் விடுத்ததாக புகார்
தி.மு.க., பிரமுகர் அத்துமீறல் ; மிரட்டல் விடுத்ததாக புகார்
ADDED : மார் 25, 2025 10:12 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆத்துப்பொள்ளாச்சியில் தனியார் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒரு தரப்புக்கு சாதகமாக மற்றொரு தரப்பினரை மிரட்டிய, தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சப் - கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த தனிநபர் ஒருவருக்கும், அவரது தந்தைக்கும் இடயே பூர்விக பூமி சொத்து சம்பந்தமாக பிரச்னை உள்ளது. இது, பொள்ளாச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, நிலமோசடி செய்யும் நபருடன் இணைந்து போலியான ஆவணங்களை ஏற்படுத்தி அபகரிக்க முயற்சி நடக்கிறது.இந்நிலையில், பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர், அத்துமீறி உள்ளே நுழைந்து, அங்கு இருந்த நபர்களை வெளியேறுமாறு மிரட்டினார். கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், என்னை எதுவும் செய்ய முடியாது என கூறினார்.
எனவே, இது குறித்து விசாரித்து, தி.மு.க., பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.