Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரியில் முப்பெரும் விழா; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கல்லுாரியில் முப்பெரும் விழா; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கல்லுாரியில் முப்பெரும் விழா; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கல்லுாரியில் முப்பெரும் விழா; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

ADDED : மார் 24, 2025 11:04 PM


Google News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 13ம் ஆண்டு, வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் ரத்தினம் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லுாரி தாளாளர் சிவானிகிருத்திகா வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் தனமுருகன், ஆண்டறிக்கை வாசித்தார். வேலைவாய்ப்பு அதிகாரி மோகன்ராம், நடப்பு ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார்.

காஞ்சிபுரம் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவன அசோசியேட் பேராசிரியர் விஜயகுமார் பேசுகையில், ''மாணவர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்லுாரியில் படிக்கும் போதே திறமைகளை வளர்த்துக்கொண்டால், பிற நாடுகளுக்கு சென்று படிக்கவும், பணிபுரியவும் வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.

சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நான்காமாண்டு வீரபாண்டியன், கல்லுாரியின் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பட்டயம் வழங்கப்பட்டது. கல்லுாரி முதன்மையர் தனபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us