Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை: உருவான பின்னணியை விவரிக்கிறார் சிற்பி

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை: உருவான பின்னணியை விவரிக்கிறார் சிற்பி

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை: உருவான பின்னணியை விவரிக்கிறார் சிற்பி

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை: உருவான பின்னணியை விவரிக்கிறார் சிற்பி

ADDED : ஜன 06, 2024 10:53 PM


Google News
அறம், பொருள், இன்பம் என, முப்பால் சுவையுடன் 1330 திருக்குறள் வடித்து தந்த திருவள்ளுவருக்கு, கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

குறிச்சி சிறுகுளத்தின் மையப்பகுதியில், இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட, முதல் திருவள்ளுவர் சிலை இதுதான்.

இந்த சிலையை வடிவமைத்த, கோவையை சேர்ந்த சிற்பி (Kinetic Sculptures) திருமூர்த்தியிடம் பேசிய போது, புதுமையான இந்த சிலையை வடிவமைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இப்படி ஒரு சிலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. இதற்கு முன் இருந்த மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வித்தியாசமாக செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தார். நான் என் ஐடியாவை சொன்னதும் ஏற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் முக்கிய அம்சம் அறம், பொருள், இன்பம். இதை அடிப்படையாக கொண்டு தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி, இந்த சிலையை உருவாக்கி இருக்கிறோம்.

அறம் என்ற சொல் வள்ளுவரின் நெற்றியிலும், பொருள் என்ற சொல் வலது கை தோள்பட்டையிலும், இன்பம் என்ற சொல் இடது கை தோள்பட்டையிலும் இடம் பெற்றுள்ளது.

கண்களுக்கு 'ஐ' என்ற எழுத்தை பயன்படுத்தி இருக்கிறோம். ஐ என்ற எழுத்தின் அர்த்தம் கண் என்று பொருளல்ல; தலைவன், முதல்வன் என்று பொருள்படும்.

தமிழின் முதல் எழுத்து வடிவமான, தமிழி எழுத்துக்களில் தமிழ் என்ற வார்த்தையை உருவாக்கி இருக்கிறோம். அது மார்பில் இடம் பெற்றுள்ளது.

வட்டெழுத்துகள், கல்வெட்டு வடிவ எழுத்துக்களும் இதில் உண்டு. மொத்த உருவத்தில் 1330 எழுத்துகளை கொண்டு வெல்டிங் செய்யப்பட்டுள்ளது.

20 அடி உயரம் கொண்டது. இந்த சிலை, 24 பாகங்கள் கொண்டது. கழற்றி எடுத்து மாட்டலாம். உள்புறம் கூடாக இருக்கும். இரும்பு என்பதால் , துருப்பிடிக்காமல் பராமரிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

அறம் என்ற சொல் வள்ளுவரின் நெற்றியிலும், பொருள் என்ற சொல் வலது கை தோள்பட்டையிலும், இன்பம் என்ற சொல் இடது கை தோள்பட்டையிலும் இடம் பெற்றுள்ளது.

கண்களுக்கு 'ஐ' என்ற எழுத்தை பயன்படுத்தி இருக்கிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us