ADDED : ஜூன் 13, 2025 10:03 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகரில் திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடை மைக்கண் மாரியம்மன் மகேஸ்வர கோவிலில் நேற்று திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடந்தது.
இதை அடுத்து திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், தெய்வ சேக்கிழார் ஆகிய விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்து, அலங்கார பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து திருஞானசம்பந்தருக்கும் அபிஷேகம், அலங்கார பூஜை செய்தனர்.
பின்பு அலங்காரம் செய்த பல்லக்கில், திருஞானசம்பந்தரை ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.