/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு ஆண்கள் பள்ளி நூற்றாண்டு விழா அரசு ஆண்கள் பள்ளி நூற்றாண்டு விழா
அரசு ஆண்கள் பள்ளி நூற்றாண்டு விழா
அரசு ஆண்கள் பள்ளி நூற்றாண்டு விழா
அரசு ஆண்கள் பள்ளி நூற்றாண்டு விழா
ADDED : ஜூன் 13, 2025 10:02 PM

சூலுார்; சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது.
சூலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்த,1925ம் ஆண்டு ஏப்., 1ம் தேதி தாலுகா போர்டு துவக்கப்பள்ளியாக துவக்கப்பட்டது. பல ஆயிரம் சான்றோர்கள், அரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள், தொழில் முனைவோர்களை உருவாக்கிய பெருமை கொண்ட இப்பள்ளி, தற்போது நூற்றாண்டை கண்டுள்ளது. நூற்றாண்டு துவக்க விழா நேற்று நடந்தது.
எம்.பி., ஈஸ்வரசாமி, 'தைரோ கேர்' நிறுவனர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் வேலுசாமி, நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, மாவட்ட செயலாளர் முருகேசன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''எந்த ஒரு மாணவரையும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பெற்றோர் பேசக்கூடாது. மதிப்பெண் மட்டும் வாழ்க்கையல்ல.
குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவனுக்குள்ளும் ஏராளமான தனித்திறன்கள் இருக்கும். அவற்றை கண்டறிந்து பெற்றோரும், ஆசிரியரும் ஊக்கப்படுத்த வேண்டும். வாழ்வின் கடைசி வரை நம்முடன் இருப்பது கல்வி மட்டுமே. அதனால், அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும்,'' என்றார்.