/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடிநீர் குழாய் பதித்த இடத்தில் லாரிக்கு சிக்கல்குடிநீர் குழாய் பதித்த இடத்தில் லாரிக்கு சிக்கல்
குடிநீர் குழாய் பதித்த இடத்தில் லாரிக்கு சிக்கல்
குடிநீர் குழாய் பதித்த இடத்தில் லாரிக்கு சிக்கல்
குடிநீர் குழாய் பதித்த இடத்தில் லாரிக்கு சிக்கல்
ADDED : ஜன 03, 2024 12:13 AM

கோவை;பீளமேடு அருகே ஹட்கோ காலனியில், குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சிக்கிக்கொண்ட லாரியால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பீளமேடு, ஹட்கோ காலனி பகுதியில் காஸ் சிலிண்டர் ஏற்றிய லாரி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ரோட்டின் இடது புறமாக, பில்லுார்-3 குடிநீர் திட்டத்துக்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில், லாரியின் முன் சக்கரம் சிக்கிக்கொண்டது. லாரியை மீட்கும் பணி நேற்று நடந்தது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஹட்கோ காலனியில் இருந்து கருப்பண்ண கவுண்டர் லே-அவுட் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு, பில்லுார்-3 குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி சமீபத்தில்தான் முடிந்தது. ரோட்டின் ஓரம் குழி தோண்டப்பட்ட இடத்தில், 'வெட் மிக்ஸ்' போட்டு நான்கு நாட்களே ஆனதால், காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சிக்கிக்கொண்டது' என்றனர்.