ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான அஞ்சலை கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான அஞ்சலை கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான அஞ்சலை கைது
ADDED : ஜூலை 19, 2024 09:21 PM

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.,நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டார்.
அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததுடன் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தாகவும், கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அஞ்சலை தலைமறைவானார். தொடர்ந்து பா.ஜ..வை சேர்ந்த கரு.நாகராஜன் வெளியிட்டு இருந்த அறிக்கையில் அஞ்சலை பா.ஜ,,வில் இருந்து நீக்கப்படுகிறார். கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தலைமறைவாகி இருந்த அஞ்லையை ஓட்டேரி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரவுடி எல்லப்பன் என்பவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.