/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடிய சப்-கலெக்டர் பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடிய சப்-கலெக்டர்
பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடிய சப்-கலெக்டர்
பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடிய சப்-கலெக்டர்
பழங்குடியின மக்களிடம் கலந்துரையாடிய சப்-கலெக்டர்
ADDED : பிப் 23, 2024 11:32 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, வால்பாறை பழங்குடியின மக்களிடம் சப்-கலெக்டர் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
பொள்ளாச்சி அருகே, வால்பாறை சங்கரன்குடி, உடும்பன்பாறை பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு, சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
அதன்பின், பழங்குடியின மக்களிடம், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், ரேஷன் கார்டு, ஜாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாடு குறித்து பழங்குடியின மக்களிடம் சப்-கலெக்டர் கலந்துரையாடினார்.
அவர்களிடம் இருந்து, ஜாதிச்சான்றிதழ் விண்ணப்பங்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆய்வின் போது, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.