Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்மேற்கு பருவமழை துவங்குகிறது விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன

தென்மேற்கு பருவமழை துவங்குகிறது விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன

தென்மேற்கு பருவமழை துவங்குகிறது விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன

தென்மேற்கு பருவமழை துவங்குகிறது விவசாயிகள் செய்ய வேண்டியதென்ன

ADDED : மே 21, 2025 12:28 AM


Google News
கோவை; தென்மேற்கு பருவமழை காலம் துவங்கும் முன்னர், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும் என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு நாட்கள், லேசான மழை முதல் மிதமான மழை கோவையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

இன்று, 24 மி.மீ., 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை, 2 -3மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக காற்று மணிக்கு, 10-16 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மேற்கு மலைஅடிவாரங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் கவனிக்க!


n மழை எதிர்பார்க்கப்படுவதால், குறுகிய கால நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார்செய்ய வேண்டும்.

n சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் மற்ற இறவை பயிர்களுக்கு மழை தண்ணீர் வடிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

n தென்மேற்கு பருவகாலம் துவங்கும் முன், அனைத்து கால்நடைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

n கொட்டகைகளில் மழை நீரால், நீலநாக்கு நோய் வராமல் இருக்க செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.

n கால்நடை தீவனங்களில் அதிகளவில் ஈரத்தன்மை வராமல் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us