/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளாஸ்டிக் குப்பை மீது மண் கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கை அகற்றாமல் அலட்சியம் பிளாஸ்டிக் குப்பை மீது மண் கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கை அகற்றாமல் அலட்சியம்
பிளாஸ்டிக் குப்பை மீது மண் கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கை அகற்றாமல் அலட்சியம்
பிளாஸ்டிக் குப்பை மீது மண் கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கை அகற்றாமல் அலட்சியம்
பிளாஸ்டிக் குப்பை மீது மண் கொட்டி மூடிய ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கை அகற்றாமல் அலட்சியம்
ADDED : மே 21, 2025 12:29 AM

வடவள்ளி, ; மருதமலை அடிவாரத்தில், வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்தாக கருதப்பட்ட, குப்பை கிடங்கை முறையாக அகற்றாமல், பிளாஸ்டிக் குப்பை மீது மண் கொட்டி மூடி, குப்பையை அகற்றியதாக ஊராட்சி நிர்வாகம், மாயையை உருவாக்குகிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில், சோமையம்பாளையம், மருதமலை, சுல்தானியபுரம், கஸ்தூரிநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், கணுவாய் மற்றும் கே.என்.ஜி.,புதூர் பிரிவின் ஒரு பகுதி ஆகிய கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும் உள்ளன. இதனால், இந்த ஊராட்சியில், நாள்தோறும், 8 டன் குப்பையும், மருதமலை கோவில் விசேஷ காலங்களில், 11 டன் குப்பையும் சேகரமாகி வந்தது.
இந்த குப்பையை, மருதமலை அடிவாரம், வனப்பகுதியை ஒட்டியிருந்த, 7 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் கடந்த, ஐந்து ஆண்டுகளாக கொட்டி வந்தது. வனப்பகுதியில் உள்ள மான், யானை போன்ற வனவிலங்குகள், இந்த குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை உண்கிறது.
யானை சாணங்களில் பிளாஸ்டிக் அதிகளவு காணப்படுவதை வைத்து, வனத்துறையினர் இதை உறுதி செய்தனர். அதோடு, இக்குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவதால், வனப்பகுதியிலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
இதனால், இக்குப்பை கிடங்கை அகற்ற, பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பையை கொட்டி வந்தது.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, இக்குப்பை கிடங்கின் அருகிலேயே, பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்தது.
இந்த யானையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு, பிளாஸ்டிக் குப்பையை உண்டதும் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து, சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், அவசர அவசரமாக, குப்பை கிடங்கில் உள்ள குப்பையை அகற்றாமல், மண் கொட்டி மூடிவிட்டு, குப்பை அகற்றப்பட்டது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறது.
பிளாஸ்டிக்கை உபயோகிப்பதால், மண்ணில் மக்காமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊராட்சி நிர்வாகமே, பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்து வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வனப்பகுதியில் உள்ள மான், யானை போன்ற வனவிலங்குகள், இந்த குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை உண்கிறது.
யானை சாணங்களில் பிளாஸ்டிக் அதிகளவு காணப்படுவதை வைத்து, வனத்துறையினர் இதை உறுதி செய்தனர். அதோடு, இக்குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவதால், வனப்பகுதியிலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.