Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது'

'பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது'

'பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது'

'பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது'

ADDED : மார் 21, 2025 11:10 PM


Google News
கோவை,; கேர்-டி தன்னார்வ அமைப்பு சார்பில், குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு, நேற்று கோவையில் நடந்தது.

அமைப்பின் இயக்குனர் பிரதிவிராஜ் கூறுகையில், ''சமூக பணியில் ஈடுபடும் அனைத்து களப்பணியாளர்களும் கட்டாயம் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு சார்ந்த அரசு திட்டங்கள், சட்டங்கள், உரிமைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

2024-25 பிப்ரவரி மாத புள்ளிவிபரத்தின் படி, தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 940 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பல்வேறு காரணங்களால் குறைந்துதான் உள்ளது. அதே போன்று, குழந்தை திருமணங்களும் அதிகம் நடக்கின்றன. களப்பணியாளர்கள் உரிய விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

இந்நிகழ்வில், வழக்கறிஞர் ஆர்த்தி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், வழக்கறிஞர் மதிவாணன் இலவச சட்ட ஆலோசனை மையத்தின் பங்கு குறித்தும் பேசினார். அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வல அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us