ADDED : செப் 10, 2025 10:03 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அடுத்த புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உறுப்பினர் ஜெயராமன் பேசுகையில்,இந்த அரசு பள்ளியை, கல்வியின் தரத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும், தனியார் பள்ளிக்கு இணையாக, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தையும், இரண்டாவதாக கல்வியையும் கற்றுக் கொடுக்கிறோம், என்றார்.
விழாவில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் நடராஜன், உறுப்பினர்கள் பட்டுலிங்கம், வேலுசாமி, செடுவப்பன் உட்பட ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியை மோகனாம்பாள் நன்றி கூறினார்.