/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீரமாட்சி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் வீரமாட்சி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
வீரமாட்சி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
வீரமாட்சி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
வீரமாட்சி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : செப் 10, 2025 10:04 PM
அன்னுார் ; கரியாகவுண்டனுார், வீரமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
கரியா கவுண்டனுார், மேற்குத் தோட்டத்தில், வீரமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் பூர்த்தி ஆனது. இதையடுத்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு முழுவதும் வர்ணம் தீட்டப்பட்டது.
கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்கார பூஜை, நடந்தது. மாலையில் முதல் கால வேள்வி பூஜை, வேத பாராயணம் நடைபெற்றது.
இன்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு விமான கோபுரத்திற்கும், 8:30 மணிக்கு வீரமாட்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து தசதானம், தச தரிசனம், மகாபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.