/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆசிரியர் காலிப்பணியிட பிரச்னை தீர்வுக்கு கமிஷனரிடம் கோரிக்கைஆசிரியர் காலிப்பணியிட பிரச்னை தீர்வுக்கு கமிஷனரிடம் கோரிக்கை
ஆசிரியர் காலிப்பணியிட பிரச்னை தீர்வுக்கு கமிஷனரிடம் கோரிக்கை
ஆசிரியர் காலிப்பணியிட பிரச்னை தீர்வுக்கு கமிஷனரிடம் கோரிக்கை
ஆசிரியர் காலிப்பணியிட பிரச்னை தீர்வுக்கு கமிஷனரிடம் கோரிக்கை
ADDED : ஜன 04, 2024 12:34 AM
கோவை : பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் காலிப்பணியிட பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம், 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா அளித்த மனுவில், 'பீளமேடு, பயனீர் மில் ரோட்டில் 2001ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி பள்ளியில், பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் சேர்க்கைபுரிந்து வருகின்றனர்.
இதில், பொருளாதார பாடத்திற்கு கடந்த, 22 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில், நிரந்தர ஆசிரியர் பணியிடம் என்பது அவசியத் தேவைகளில் ஒன்று.
எனவே, பள்ளியில் காலியாகவும், உபரியாகவும் இருக்கும் முதுகலை ஆசிரியர் உயிரியல் பணியிடத்தை, முதுகலை ஆசிரியர் பொருளாதாரம் என, மாற்றி உத்தரவு வழங்க வேண்டும். இதனால், அரசுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாது.
மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, இக்கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.