Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கியது! ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு

தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கியது! ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு

தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கியது! ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு

தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கியது! ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு

ADDED : செப் 11, 2025 09:54 PM


Google News
Latest Tamil News
கோவை; கோவை தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பாலப் பணி மீண்டும் துவங்கியுள்ளது; ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிப்பதற்கு, நெடுஞ்சாலைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

கோவை --- அவிநாசி ரோட்டில் இருந்து சத்தி ரோட்டுக்குச் செல்வதற்கான இணைப்பு சாலையாக, தண்ணீர் பந்தல் ரோடு உள்ளது. சேரன் மாநகர், கணபதி மாநகர், விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இது பிரதானமாக இருப்பதால், தினமும் ஏராளமான வானகங்கள் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.

ஹோப் காலேஜ் - தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் மக்கள் சிரமங்களை சந்தித்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 2006ல் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தண்டவாளத்தை கடக்கும் பகுதியில் ரயில்வே தரப்பில் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டது.

ரோட்டின் இருபுறமும் மேம்பாலத்துக்கான இதர பணிகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) மேற்கொள்கிறது. நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், நீதிமன்றத்துக்கு சிலர் சென்றதால் பணிகள் தடைபட்டன. வழக்குகள் கடந்தாண்டு முடிவுக்கு வந்தன. இதையடுத்து, மேம்பாலப் பணிக்கு 'டெண்டர்' கோரப்பட்டு, பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.

மேம்பாலம், 8.50 மீ., அகலம், 549.14 மீ., நீளம், மொத்தம், 17 துாண்களுடன் அமைகிறது. மேம் பாலம் கட்ட ரூ.20 கோடிக்கு மேல் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டதால், அவிநாசி ரோடு, ஹோப்ஸ் கடந்து சென்று, டைடல் பார்க் ஒட்டிய சாலை வழியாக, விளாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். நடந்து செல்லும் மக்கள், ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். அதனால், மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இந்திரனிடம் கேட்டபோது, ''தண்ணீர் பந்தல் மேம்பாலம் கட்டுவதற்கு இரு வாரங்களுக்கு முன் மண் பரிசோதனை செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us