/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில்களில் திருவாசகம் பாட கட்டணம்; தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கண்டனம் கோவில்களில் திருவாசகம் பாட கட்டணம்; தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்
கோவில்களில் திருவாசகம் பாட கட்டணம்; தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்
கோவில்களில் திருவாசகம் பாட கட்டணம்; தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்
கோவில்களில் திருவாசகம் பாட கட்டணம்; தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கண்டனம்
ADDED : செப் 21, 2025 11:16 PM
சூலுார்; அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், திருவாசகம், திருமந்திரம் பாட கட்டணம் வசூலிப்பதற்கு, தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
சூலுார் ஒன்றிய தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் செயற்குழு கூட்டம் சூலுாரில் நடந்தது. மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மருதமலை, பழநி, திருச்செந்தூர், உட்பட ஆறு கோவில்களில் இடை நிறுத்த தரிசன முறை கொண்டுவரப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தல், பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இடைநிறுத்த தரிசனமுறையை ரத்து செய்ய வேண்டும்.
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், திருவாசகம், திருமந்திரம் பாட கட்டணம் வசூலிப்பது கண்டிக்கதக்கது. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும். துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட தமிழருக்கு வாழ்த்து தெரிவித்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நாகராஜ், லீலா கிருஷ்ணன், கிருஷ்ணமாச்சாரி, சபரி, ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.