/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழக பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு தலைவரானார் குமரகுரு தமிழக பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு தலைவரானார் குமரகுரு
தமிழக பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு தலைவரானார் குமரகுரு
தமிழக பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு தலைவரானார் குமரகுரு
தமிழக பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு தலைவரானார் குமரகுரு
ADDED : செப் 07, 2025 07:30 AM

சென்னை : தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவராக குமரகுரு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், நீண்ட காலமாக பா.ஜ.,வில் இருந்து வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். மத்திய அரசின் வழக்கறிஞராக உள்ள அவர், சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்துள்ளார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சியில், சபா நாயகராக இருந்த முனுஆதி யின் மகன் தான் குமரகுரு.