/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருவண்ணாமலையில் எபிக்ஸ்கேஷ் 100வது கிளை திருவண்ணாமலையில் எபிக்ஸ்கேஷ் 100வது கிளை
திருவண்ணாமலையில் எபிக்ஸ்கேஷ் 100வது கிளை
திருவண்ணாமலையில் எபிக்ஸ்கேஷ் 100வது கிளை
திருவண்ணாமலையில் எபிக்ஸ்கேஷ் 100வது கிளை
ADDED : செப் 07, 2025 07:31 AM

சென்னை : 'எராயா லைப் ஸ்பேஸஸ் லிமிடெட்' நிறுவனத்தின் துணை நிறுவனம் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்றம் மற்றும் 'அவுட்வர்ட் ரெமிடன்ஸ்' சேவைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும், 'எபிக்ஸ்கேஷ் வேர்ல்டு மணி லிமிடெட்' நிறுவனம், தன், 100வது கிளையை, திருவண்ணாமலையில் துவக்கியுள்ளது.
துவக்க விழாவில், திருவண்ணாமலை டவுன் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த புதிய கிளை, சில்லரை வர்த்தகர்கள், சுற்றுலா பயணியர், வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்லும் மாணவர்கள், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு முழுதுமான வெளிநாட்டு நாணய சேவைகளை வழங்கும்.
இதில், நாணய மாற்றம், முன்பணம் ஏற்றப்பட்ட, 'பாரெக்ஸ் கார்டு'கள், சர்வதேச பயண நாணய தீர்வுகள் அடங்கும்.
இதுகுறித்து, 'எபிக்ஸ்கேஷ்' - கட்டணம் தொடர்பான தீர்வுகளின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் குருபிரசாத் கூறுகையில், ''100வது கிளை என்ற மைல் கல்லை எட்டுவது வெறும் எண் அல்ல.
இது, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், நாட்டின் பல பகுதிகளின் உழைக்கும் எங்கள் குழுக்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது,'' என்றார்.