/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை இலவச பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
இலவச பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
இலவச பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
இலவச பட்டா கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : மே 31, 2025 04:45 AM

அன்னுார்; காரே கவுண்டன் பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம், கரியாம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 1,000 குடும்பங்கள் உள்ளன.
இந்த குடும்பத்தினர் இலவச வீட்டு மனை பட்டா கோரி, மனு அளித்து வருகின்றனர். எனினும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த ஏழு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள், அன்னுார் தாலுகா அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர். பின்னர் தாசில்தார் யமுனா விடம் பேசுகையில், 'வீட்டு மனை மற்றும் வீடு இல்லாததால் பலநுாறு வீடுகளில் தலா இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றன.
ஓட்டு வீடு, குடிசை வீடு, சேதமான வீடு என அபாயமான வீடுகளில் வசித்து வருகின்றனர். மழைக்காலத்தில் வீடுகளில் மழை நீர் ஒழுகுகிறது. உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,' என்று வலியுறுத்தினர்.
உங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கிறோம் என தாசில்தார் யமுனா, துணை தாசில்தார்கள் தெய்வ பாண்டியம்மாள், பெனசிர் ஆகியோர் சமாதானம் தெரிவித்தனர்.