/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடரும் மழையால் நிரம்பியது குறிச்சி குளம் தொடரும் மழையால் நிரம்பியது குறிச்சி குளம்
தொடரும் மழையால் நிரம்பியது குறிச்சி குளம்
தொடரும் மழையால் நிரம்பியது குறிச்சி குளம்
தொடரும் மழையால் நிரம்பியது குறிச்சி குளம்
ADDED : மே 31, 2025 04:47 AM

போத்தனுார்; கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சி பிரிவு - குறிச்சி வரையில் சாலையின் வலதுபுறம், சுமார், 320 ஏக்கரில் குறிச்சி குளம் உள்ளது. இங்கு நீர் நிரம்பினால் சுமார், 15 கி.மீ. சுற்றளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
இக்குளம் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது. இதனால் நொய்யலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது.
கடந்த, 26 முதல் குறிச்சி குளத்திற்கு நீர் வர துவங்கியது. நான்கு நாட்கள் கடந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குளம் நிரம்பியது.
உபரி நீர், கோவை -- பாலக்காடு சாலையை கடந்து, மீண்டும் நொய்யலாற்றுக்கு செல்கிறது. இப்பகுதியிலுள்ள பெரியசாமி வீதியில், ஒரு வீட்டினை சுற்றி ஆற்றுக்கு செல்வதால், அவ்வீட்டில் வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.