/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கை கொடுத்தது கோடை மழை; வனத்தில் இல்லை 'தீ' விபத்து அபாயம் கை கொடுத்தது கோடை மழை; வனத்தில் இல்லை 'தீ' விபத்து அபாயம்
கை கொடுத்தது கோடை மழை; வனத்தில் இல்லை 'தீ' விபத்து அபாயம்
கை கொடுத்தது கோடை மழை; வனத்தில் இல்லை 'தீ' விபத்து அபாயம்
கை கொடுத்தது கோடை மழை; வனத்தில் இல்லை 'தீ' விபத்து அபாயம்
ADDED : மார் 25, 2025 09:56 PM

மேட்டுப்பாளையம்; கோடை மழை காரணமாக, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என மூன்று வனச்சரகங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், காரமடையில் வெள்ளியங்காடு அருகே தீ விபத்து ஏற்பட்டது.
வனத்துறையினரின் தீவிர முயற்சியால் தீ உடனே அணைக்கப்பட்டு, மேற்கொண்டு தீ விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே போல் மூன்று வனச்சரகங்களிலும் மொத்தம் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை தீ தடுப்பு கோடுகள் போடப்பட்டன. வனவிலங்குகள் ஊருக்குள் தண்ணீரை தேடி வராமல் இருக்க அடர் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை நன்கு பெய்தது. நீர் ஆதரங்களுக்கும் தண்ணீர் கிடைத்தது.
இதுகுறித்து, சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''அண்மையில் பெய்த கோடை மழை காரணமாக வனப்பகுதிகளில் தீ விபத்து அபாயம் குறைந்துள்ளது.
எனினும் வனத்துறையினர் வனப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் யாரும் வனப்பகுதி ஓரம் யாரும் குப்பைகளுக்கு தீ வைக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,' என்றார்.
காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில், பெள்ளாதி குளம் உள்ளது. கோடை மழையால், இக்குளத்திற்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.