/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயறு சாகுபடியை ஊக்குவிக்க 51 லட்சம் ரூபாய் மானியம் பயறு சாகுபடியை ஊக்குவிக்க 51 லட்சம் ரூபாய் மானியம்
பயறு சாகுபடியை ஊக்குவிக்க 51 லட்சம் ரூபாய் மானியம்
பயறு சாகுபடியை ஊக்குவிக்க 51 லட்சம் ரூபாய் மானியம்
பயறு சாகுபடியை ஊக்குவிக்க 51 லட்சம் ரூபாய் மானியம்
ADDED : மே 11, 2025 12:16 AM
கோவை: கோவை மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் வழங்க ரூ.51 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், 8,608 ஹெக்டேரில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயறு வகை சாகுபடியை ஊக்குவிக்க, மானியம் வழங்கப்படுகிறது.
450 ஹெக்டேர் பரப்பில், உயர் விளைச்சல் பயறு ரகங்களான தட்டை, உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, விரிடி திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் அடங்கிய செயல்விளக்கத்திடல்கள் மானியத்தில் அமைக்கப்பட உள்ளன.
உளுந்து, பச்சைப்பயறு, தட்டை, கொள்ளு விதை உற்பத்தி; திரவ உயிர் உரங்கள், இரும்பு, தாமிரம், துத்தநாகம், கந்தகம், சுண்ணாம்பு, போரான், மாங்கனீசு, மக்னீசியம், குளோரின், நிக்கல், மாலிப்டினம் ஆகிய நுண்ணூட்டங்கள் வழங்கப்படுகின்றன. வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.