ADDED : அக் 22, 2025 01:44 AM

கோவை: கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த கல்லுாரி மாணவி மீது பஸ் மோதி பரிதாமாக உயிரிழந்தார்.
கடலுாரை சேர்ந்தவர் ஹரினி (19). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
தீபாவளி பண்டிகைக்கு தன் சொந்த ஊருக்கு சென்று விட்டு திருப்பி வந்த ஹரினி, கல்லுாரி ஹாஸ்டலுக்கு செல்ல இரவு, 8:00 மணி அளவில், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார்.
அப்போது, 96 எண் கொண்ட அரசு பஸ் ஹரினி மீது மோதியது. படுகாயம் அடைந்த ஹரினி, அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் ஒரு முதியவர் உட்பட இரண்டு பெண்கள் காயமடைந்தனர். காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


