Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மயிலந்தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்: கிணத்துக்கடவு அருகே மக்கள் உற்சாகம்

மயிலந்தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்: கிணத்துக்கடவு அருகே மக்கள் உற்சாகம்

மயிலந்தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்: கிணத்துக்கடவு அருகே மக்கள் உற்சாகம்

மயிலந்தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்: கிணத்துக்கடவு அருகே மக்கள் உற்சாகம்

ADDED : அக் 22, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
கிணத்துக்கடவு: கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில், மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி, மயிலந்தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடசித்துாரில், ஹிந்துக்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய குடும்பத்தினரும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் உறவினர்களாக பழகி வருவதால், ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்கின்றனர்.

மேலும், ஜாதி மதம் பார்க்காமல், அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக பண்டிகையை கொண்டாடுவார்கள்.

மயிலந்தீபாவளியான நேற்று, வடசித்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, ராட்டிணங்கள், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள், அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலமாக காட்சியளித்தது.

திருமணமாகி வெளியூரில் வசிக்கும் பெண்களும் குடும்பத்துடன், பெற்றோர் வீட்டிற்கு வந்து புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இஸ்லாமியர்களை, தங்களது வீட்டுகளுக்கு அழைத்து ஹிந்துக்கள் விருந்து வைத்து, ஒருவருக்கொருவர் நட்பை பகிர்ந்து பண்டிகையை கொண்டாடினர். பருவ மழை பெய்தாலும், பண்டிகைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கை குறையாமல், வடசித்துார் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us