/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி மையம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி மையம்
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி மையம்
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி மையம்
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி மையம்
ADDED : மே 11, 2025 11:48 PM
வால்பாறை; வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், பி.காம்., பி.காம்., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), பி.பி.ஏ., பி.எஸ்சி.,(கம்யூட்டர் சயின்ஸ்), பி.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ., பி.ஏ., (தமிழ், ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவின் கீழ், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கல்லுாரி முதல்வர் ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் உள்ள, 520 சீட்களுக்கு, ஒன்பது பாடப்பிரிவுகளின் கீழ், இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவங்கப்படவுள்ளது.
இதற்கான உதவி பேராசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை இன்று (12ம் தேதி) முதல் நடைபெறவுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லுாரியில் நேரடியாக வந்து, உதவி மையத்தை அணுகி, தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.