Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை; 750 கிராம் சத்துமாவு வழங்கல்

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை; 750 கிராம் சத்துமாவு வழங்கல்

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை; 750 கிராம் சத்துமாவு வழங்கல்

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை; 750 கிராம் சத்துமாவு வழங்கல்

ADDED : மே 11, 2025 11:48 PM


Google News
பொள்ளாச்சி; அங்கன்வாடி மையங்களுக்கு, கோடை விடுமுறை அளிக்க உள்ளதால், முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சத்துமாவை கணக்கிட்டு, 15 நாட்கள் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில் 1,775 குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகளும் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.

குறிப்பாக, இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். பள்ளிப் பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக பெற்றோர்களும் ஆர்வமுடன் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அழைத்தும் வருகின்றனர்.

தற்போது, வெயிலின் தாக்கம் காரணமாக, அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வரும், 25ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. அவ்வகையில், குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சத்துமாவு அளவை கணக்கிட்டு, 15 நாட்களுக்கு சேர்த்து வழங்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:

அங்கன்வாடி மையங்களுக்கு, 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாள் ஒன்றுக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும், 50 கிராம் சத்துமாவு அளவை 15 நாட்களுக்கு கணக்கிட்டு, மொத்தமாக, 750 கிராம் சத்துமாவு, பெற்றோர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான பணியில், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு, கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us