/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில இறகுப்பந்து; 60 அணிகள் பங்கேற்பு மாநில இறகுப்பந்து; 60 அணிகள் பங்கேற்பு
மாநில இறகுப்பந்து; 60 அணிகள் பங்கேற்பு
மாநில இறகுப்பந்து; 60 அணிகள் பங்கேற்பு
மாநில இறகுப்பந்து; 60 அணிகள் பங்கேற்பு
ADDED : மே 20, 2025 11:52 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கே.வி.ஆர்., ப்ரண்ட்ஸ் கிளப் மற்றும் கிரேண்ட் பேட்மிட்டன் அகாடமி இணைந்து நடத்திய, மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு இறகுப்பந்து போட்டி, சாம்பமூர்த்தி நகரில் உள்ள, உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், மொத்தம் 60 அணிகளின் வீரர்கள் பங்கேற்றனர். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு குழுவாகவும், 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இன்னொரு குழுவாகவும் பிரிந்து போட்டிகள் நடைபெற்றது.
இதில், 40 வயதுக்கு மேலுள்ள பிரிவில், பாலாஜி மற்றும் உமேஷ் வின்னராகவும், ஜேம்ஸ் மற்றும் தீபன் ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 'மென்ஸ் ஓபன்' பிரிவில், ஹரிஷ் மற்றும் நவீன் வின்னராகவும், பாலாஜி மற்றும் உமேஷ் ரன்னராகவும் தேர்வுசெய்யப்பட்டு, பரிசு தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை, கே.வி.ஆர்., கிளப் நண்பர்கள் செய்தினர்.