/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
ADDED : மே 20, 2025 11:53 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட தொண்டாமுத்துாரில், வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை பிரசாரம் நடந்தது. 'அட்மா' தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
விழாவில், தற்போது வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து, கலை குழுவினர் பாடல்களாக பாடியும், நாடகமாக நடித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.
மேலும், நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள், தொண்டாமுத்துார் கிராமம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கினர்.
இத்திட்டத்தில், விவசாயிகள் அனைத்து துறைகளையும் அணுகி ஊராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களை பெற, முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
கலைப்பிரசாரத்தில் துணை வேளாண் அலுவலர் சந்தியாகு இருதயராஜ், தெற்கு வட்டார 'அட்மா' தொழில்நுட்ப மேலாளர் நாகநந்தினி, வேளாண் அலுவலர் ஆனந்தபாபு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.