ADDED : ஜூன் 12, 2025 10:11 PM

அன்னுார்; அன்னுார், ஓதிமலை சாலையில், மன்னீஸ்வரர் கோவிலும், பெரிய அம்மன் கோயில் உள்ளன. இங்கு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டது. ஆனால் கழிவுநீர் வெளியேற வழி செய்யப்படவில்லை. இதனால் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஓதிமலை ரோட்டில் செல்லும் பக்தர்கள் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் வார சந்தை வளாகத்தை ஒட்டி இந்த வடிகால் அமைந்துள்ளதால், சந்தைக்கு வரும் பொதுமக்களும் கழிவு நீரினால் ஏற்படும் சுகாதாரக் கேட்டால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.