ADDED : ஜூன் 12, 2025 10:11 PM
அன்னுார்; அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 12 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி செயலாளர் மூர்த்தி, கணுவக்கரை ஊராட்சிக்கும், அங்கு பணிபுரிந்த பழனிச்சாமி, ஆம்போதி ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்போதி மகாலட்சுமி, அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். காரே கவுண்டம்பாளையம் நாச்சிமுத்து, பிள்ளையப்பம்பாளையத்திற்கும், அங்கு பணிபுரிந்த செந்தில்குமார் வடவள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வடவள்ளி ரங்கசாமி, மசக்கவுண்டன் செட்டிபாளையத்திற்கும், அங்கு பணிபுரிந்த பிரகாஷ் காரே கவுண்டம்பாளையத்திற்கும், குப்பேபாளையம் பழனிச்சாமி குன்னத்தூருக்கும், அங்கு பணிபுரிந்த சதீஷ்குமார், கரியாம்பாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.