/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி முதலிடம் குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி முதலிடம்
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி முதலிடம்
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி முதலிடம்
குறுமைய விளையாட்டு போட்டிகள்; எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி முதலிடம்
ADDED : செப் 09, 2025 10:25 PM
மேட்டுப்பாளையம்; குறுமைய விளையாட்டுப் போட்டிகளில், மாணவிகள் பிரிவில் எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதிக வெற்றி புள்ளிகளை எடுத்து, முதலிடம் பெற்றுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் காரமடை அடுத்த புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 66வது குடியரசு தின, குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, 50 பள்ளிகளில் இருந்து, 475 மாணவிகள் பங் கேற்றனர். நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளில், மாணவிகள் பிரிவில் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 130 வெற்றி புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
இதை அடுத்து மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளி, 66 வெற்றி புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 57 வெற்றி புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர் நடராஜன், உறுப்பினர் கோவிந்தராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.