/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராம் நகர் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்ராம் நகர் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
ராம் நகர் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
ராம் நகர் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
ராம் நகர் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்
ADDED : ஜன 10, 2024 11:58 PM
கோவை : ராம்நகரிலுள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம் இன்று நடக்கிறது.
ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில்(ஸ்ரீராமர் கோவில்)ஸ்ரீ ஹனுமத்ஜெயந்தி உற்சவம் நேற்று முன் தினம் காலை 8:30 மணிக்கு சங்கல்பம், கலசஸ்தாபனம், ஜபம், தீபாராதனையுடன் துவங்கியது.
நேற்று காலை 9:15 மணிக்கு, அஷ்டோத்ர சதமஹா ஹரி வாயுஸ்துதி ஹோமம், பகல் 1:00 மணிக்கு மஹாபூர்ணாஹுதி தீபாராதனை, மாலை 6:30க்கு ரிக்வேத கணபாராயணம் நடந்தது.
இன்று காலை 5:00 மணிக்கு ஆஞ்சநேயசுவாமிக்கு அபிஷேகம், பவமான, பளித்தா, வாயு, ஸீக்தஹோமம், ஸ்ரீ ராமர், சீதா, ஹனுமான் மூல மந்த்ர ஹோமங்கள், 8:30 மணிக்கு மஹாதீபாராதனை, மாலை 6:30 மணிக்கு வேதபாராயணத்துடன் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு செய்துள்ளது.