/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜி.ஆர்.என் சர்க்கரை மையம் சார்பில் சிறப்பு சர்க்கரை நோய் முகாம் ஜி.ஆர்.என் சர்க்கரை மையம் சார்பில் சிறப்பு சர்க்கரை நோய் முகாம்
ஜி.ஆர்.என் சர்க்கரை மையம் சார்பில் சிறப்பு சர்க்கரை நோய் முகாம்
ஜி.ஆர்.என் சர்க்கரை மையம் சார்பில் சிறப்பு சர்க்கரை நோய் முகாம்
ஜி.ஆர்.என் சர்க்கரை மையம் சார்பில் சிறப்பு சர்க்கரை நோய் முகாம்
ADDED : ஜூன் 12, 2025 10:21 PM
கோவை; கோவை வி.கே.கே., மேனன் ரோட்டில் உள்ள ஜி.ஆர். என் சர்க்கரை மையத்தின் 16ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சர்க்கரை நோய் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்மையத்தில், ரத்த பரிசோதனை கூடம் மற்றும் டயபட்டிக் நியூரோபதி பரிசோதனைக்கான நியூரோ கிளினிக் செயல்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது, உணவு ஆலோசனை, கால் பராமரிப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது, சர்க்கரை நோயினால் ஏற்படும் இணை நோய்கள் வராமல் தடுக்க தேவையான வழிமுறைகள் தெளிவுபடுத்தப்படுகிறது.
தற்போது ஆண்டு விழாவை முன்னிட்டு, மேலும் 10 நாட்கள் சர்க்கரை நோய் முகாம் நடைபெறுகிறது. இதில், பங்கேற்பவர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு , 0422-2522138, 90876 44001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கோகுலரமணன் தெரிவித்தார்.