/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு
நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு
நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு
நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு
ADDED : ஜூன் 12, 2025 10:21 PM
கோவை; கோவை நீதிபதிகள் குடியிருப்பில் இருந்த சந்தன மரங்கள் திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இங்கு, நீதிபதி ஒருவர் தங்கியிருந்த வீட்டில் ஐந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டிருந்தன.
புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது, அங்கு ஐந்து மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அதில் நான்கு மரங்கள் திருடிச் செல்ல பட்டிருந்தன. ஒரு மரம் பெரியதாக இருந்ததால் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.