Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இதுவரை, 4,636 பேர் இணைந்துள்ளனர்

அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இதுவரை, 4,636 பேர் இணைந்துள்ளனர்

அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இதுவரை, 4,636 பேர் இணைந்துள்ளனர்

அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இதுவரை, 4,636 பேர் இணைந்துள்ளனர்

ADDED : மே 24, 2025 06:20 AM


Google News
பள்ளிகள் திறக்க, 10 நாள் உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சுறுசுறுப்பாகியுள்ளது. திருப்பூர், தாராபுரம், கல்வி மாவட்டத்தில் இதுவரை, 4,636 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.

வரும் ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், பல பெற்றோர் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியரை நாடி விபரங்களை கேட்டு, தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் இணைந்து வருகின்றனர்.

இதுதவிர, நடுநிலைப்பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று, உயர்நிலைப்பள்ளிக்கும், பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1 புதிய குரூப் தேர்வு செய்து, வேறு பள்ளிக்கும் மாணவ, மாணவியர் ஆயத்தமாகி வருகின்றனர்.

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் கடந்த, 20ம் தேதி வரை எல்.கே.ஜி.,யில், 162, யு.கே.ஜி., 66 ஒன்றாம் வகுப்பு தமிழ் வழியில், 1,980, ஆங்கில வழியில், 918 குழந்தைகள் இணைந்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பில், 79, மூன்று மற்றும் நான்கு வகுப்பு முறையே, 45 மற்றும், 37 பேர். ஐந்தாம் வகுப்பில், 53, ஆறாம் வகுப்பில், 85 பேர் உள்ளிட்ட, 3,437 பேர் இணைந்துள்ளனர்.

ஏழு வட்டாரங்களில் அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு (693), அவிநாசியில் (692) அரசு பள்ளியில் இணைந்த குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காங்கயம் வட்டாரத்தில், 194 குழந்தைகள் மட்டும் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர்.

தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 1,199 குழந்தைகள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். அதிகபட்சமாக, ஒன்றாம் வகுப்பில், 1,101 பேர் சேர்ந்துள்ளனர்.

ஆய்வு செய்ய அறிவுரை


திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முந்தைய ஆண்டை விட மாணவ, மாணவியர் அட்மிஷன் அதிகரிக்க வேண்டும்.

அருகில் உள்ள அங்கன்வாடிகளில் படித்த குழந்தைகள் பட்டியலை வாங்கி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு அரசு பள்ளியில் இணைந்துள்ளனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு பள்ளியை நாடி வருவோரை வேறு பள்ளிகளுக்கு அனுப்பாமல், அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி, அரசு பள்ளிகளிலேயே இணைத்துக்கொள்ள வேண்டும் என துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us