ADDED : மே 24, 2025 06:20 AM
நெகமம் : நெகமம் ஒழுங்கும் முறை விற்பனை கூடத்தில், ஈரப்பதம் உலர்த்தப்பட்ட கொப்பரையை விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொப்பரை விலை அதிகரித்து வருகிறது.
தற்போது வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ கொப்பரை, 195 முதல் 200 வரை விற்பனை ஆகிறது. விலை அதிகரிப்பின் காரணத்தினால், விற்பனை கூடத்தில், 19 விவசாயிகள், 1,924 மூட்டைகள் (50 கிலோ வீதம்) கொப்பரை இருப்பு வைத்துள்ளனர். இன்னும், விலை உயர்ந்தால், விற்பனை செய்யலாம் என காத்திருக்கின்றனர்.
கடந்த வாரம் எந்த விவசாயும் கொப்பரை விற்பனையில் ஆர்வம் காட்டவில்லை. அடுத்த வாரம் கொப்பரை விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.