/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 25 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது 25 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
25 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
25 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
25 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
ADDED : செப் 01, 2025 07:28 PM
போத்தனுார்:
மதுக்கரை, நீலாம்பூர் பை -- பாஸில், பாலத்துறை சந்திப்பில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பொள்ளாச்சி பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில், எஸ்.ஐ., ஞானபிரகாஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே, கேரளா நோக்கி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.
அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம், சோல கொட்டாயி, வெள்ளோலையை சேர்ந்த சின்னசாமி என தெரியவந்தது.
கர்நாடகா மாநிலம், பங்காருபேட், பெங்கனுார் கிராமத்தில் உள்ள, லட்சுமி சீனிவாசா அரிசி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் சத்யராஜ், 25.04 டன் எடையுள்ள புழுங்கல், குருணை மற்றும் பச்சரிசி ஆகியவற்றை கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஆசிப் டிரேடர்ஸ், விக்னேஸ் டிரேடர்ஸ், பெருமாள் டிரேடர்ஸ் மற்றும் கிருஷ்ணா டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்ததும் தெரிந்தது. சின்னசாமியை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர். சத்யராஜை தேடுகின்றனர்.