Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை கொட்டுவதால் குளம் நீர் மாசுபடுகிறது சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்

குப்பை கொட்டுவதால் குளம் நீர் மாசுபடுகிறது சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்

குப்பை கொட்டுவதால் குளம் நீர் மாசுபடுகிறது சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்

குப்பை கொட்டுவதால் குளம் நீர் மாசுபடுகிறது சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்

ADDED : மார் 27, 2025 11:17 PM


Google News
அன்னுார்: காட்டம்பட்டி குளத்தில், ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதாக தன்னார்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அன்னுார் வட்டாரத்தில், பரப்பளவில் பெரியது காட்டம்பட்டி குளம். இது 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காட்டம்பட்டி, குன்னத்துார் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் பறந்து விரிந்து உள்ளது.

இந்த குளத்தில் நான்கு ஆண்டுகளாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரும், தன்னார்வலர்களும் சீரமைப்பு பணி செய்து வருகின்றனர்.

ஆயிரம் மரக்கன்றுகளுடன் அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், 'ஊராட்சி நிர்வாகமும், தனியார் சிலரும் தினமும் டன் கணக்கில் குப்பையை குளத்தில் கொட்டுகின்றனர். மேலும் சிலர் அதற்கு தீ வைத்து எரிக்கின்றனர்.

இந்த குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் குளத்தில் தேங்கியுள்ள நீர் மாசுபடுகிறது.

குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க அறிவுறுத்தும் ஊராட்சி நிர்வாகமே, குளத்தில் குப்பை கொட்டுகிறது. தீ வைத்து எரிக்கிறது.

மாவட்ட அதிகாரிகள் இதை தடுக்க வேண்டும். குளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us