/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளி முன் ரேஸ் மாணவிகள் புகார் அரசு பள்ளி முன் ரேஸ் மாணவிகள் புகார்
அரசு பள்ளி முன் ரேஸ் மாணவிகள் புகார்
அரசு பள்ளி முன் ரேஸ் மாணவிகள் புகார்
அரசு பள்ளி முன் ரேஸ் மாணவிகள் புகார்
ADDED : மார் 27, 2025 11:17 PM
அன்னுார்: அன்னுாரில், அவிநாசி சாலையில், இருசக்கர வாகனங்களில் ரேஸ் நடத்தும் இளைஞர்களால் மாணவியர் அச்சப்படுகின்றனர்.
அன்னுார், அவிநாசி சாலையில், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக, இப்பள்ளியில் மதிய உணவு இடைவேளை நேரத்திலும், மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும், இளைஞர்கள் சிலர் விலை உயர்ந்த பைக்குகளில் அதிக சத்தத்துடன் ரேசிங் செய்கின்றனர். மிக வேகமாக செல்கின்றனர். பின்னர் மீண்டும் பள்ளி முன்பு அதிக சத்தத்துடன் அன்னுார் நோக்கி செல்கின்றனர். இளைஞர்களின் இந்த ரேஸால் மாணவியர் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அனனுார் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.