/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழக்கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா
பழக்கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா
பழக்கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா
பழக்கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா
ADDED : மே 18, 2025 04:46 AM

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சியை ஒட்டி, சுற்றுலா பயணியரை கவர வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.
நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்துள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில், கோடை சீசனை ஒட்டி, நடப்பாண்டு, 35 வகைகளில், 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில், ஜின்னியா, சால்வியா, மேரிகோல்டு, பிளாக்ஸ், ஆஸ்டர், லிசியான்தஸ், பால்சம், உள்ளிட்ட மலர் வகைகள் பூத்து குலுங்குகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு மழையின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், சில இடங்களில் டேலியா மலர்கள் பாதிக்கப்பட்டன. பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் அருகே நின்று சுற்றுலா பயணியர் செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர்.
65வது பழக் கண்காட்சி இம்மாதம், 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.