/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனவளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம் மனவளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம்
மனவளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம்
மனவளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம்
மனவளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம்
ADDED : செப் 10, 2025 09:56 PM
நெகமம்; நெகமம், பழைய பெருமாள் கோவில் அருகே உள்ள, மனவளக்கலை மன்றத்தில் சித்த மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
நெகமம், சவுண்டம்மன் கோவில் தெரு, பழைய பெருமாள் கோவில் பின்பக்கம் உள்ள மனவளக்கலை மன்றத்தில், வேத சித்தா மருத்துவ கலிக்கம் அறக்கட்டளை சார்பில், நாளை (11ம் தேதி) காலை, 7:30 முதல் 8:30 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில், கண்புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ஒற்றை தலைவலி, கண் கருவளையங்கள் உள்ளிட்டவைகள் நீக்கப்படுகிறது. இதேபோன்று, பெண்களுக்கான வயிற்று வலி, மாதவிடாய் தொந்தரவு, கர்ப்பப்பை பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும், 2வது வியாழக்கிழமைகளில் நடக்கும்.