/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
ADDED : செப் 10, 2025 09:56 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, தென்னைக்கு உண்டான இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. இதில், பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
தற்போது, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் கீழ், தென்னை மரங்களுக்கும் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
இதில், பொதுப்பிரிவுக்கு - 200 ஹெக்டேருக்கும், எஸ்.சி., பிரிவுக்கு - 50 ஹெக்டேர் என மொத்தம், 250 ெஹக்டேர் பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 5 முதல் 10 வரை நடவு செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களுக்கு, ஒரு மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் 125 கூட்டுப் புழுக்கள் அடங்கிய ஒட்டுண்ணி அட்டை வழங்கப்படும்.
10 முதல் 20 தென்னை மரங்களுக்கு இரண்டு மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் 250 கூட்டுப்புழுக்கள் அடங்கிய ஒட்டுண்ணி அட்டையும், 20க்கும் மேற்பட்ட மரங்களுக்கு மூன்று மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் 375 கூட்டுப்புழுக்கள் அடங்கிய ஒட்டுண்ணி அட்டைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இத்திட்டத்தின் வாயிலாக மானியத்தில் வழங்கும் இடுபொருட்களை பெற்று பயன்பெற வேண்டும், என, தோட்டக்கலை துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.