ADDED : செப் 10, 2025 10:34 PM

கோவை,; கோவை கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவுக்கு அருகே உள்ள இடத்தில், நேற்று கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, 'நான் முதல்வன்' திட்டம் குறித்த ஷூட்டிங் நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.
சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர், நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தது குறித்து எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுத்து, பேச வைத்தார். அதை மாணவியர் ஒவ்வொருவரும் சொல்ல, வீடியோ மற்றும் போட்டோவாக ஷூட் செய்தனர்.